மஹராஷ்டிராவில் மாத்திரம் நேற்று 63,000 பேருக்கு கொவிட் தொற்று!

மஹராஷ்டிராவில் மாத்திரம் நேற்று 63,000 பேருக்கு கொவிட் தொற்று!

இந்தியாவின் மஹராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் நேற்றைய தினம் 63,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்று முன்தினத்தை விடவும் நேற்றைய தினம் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் மஹராஷ்டிரா மாநிலத்தில்  தொற்றுறுதியான 5 இலட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை அந்த மாநிலத்தில் உள்ள வைத்தியசாலைகளில் படுக்கைக்களுகான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் அங்கு இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு வார இறுதியில் அமுல்படுத்தப்பட்ட முழுமையான ஊரடங்கு சட்டம் இன்று காலையுடன் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் மஹராஸ்டிரா மாநிலத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் இந்தியாவில் 1 இலட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது