
தமிழகத்தில் இன்று 5989 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
தமிழகத்தில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5989 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 23 பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களில் சென்னையில் மாத்திரம் ஆயிரத்து 977 நோயாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தமிழகத்தில் மாத்திரம் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 26 ஆயிரத்து 816ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் இதுவரையில், 12 ஆயிரத்து 886 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது