கள்ளக்காதலியின் 5 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர்

கள்ளக்காதலியின் 5 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

 


இளம் பெண்ணுக்கு திருமணமாகி 5 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததும் கணவர் இளம்பெண்ணை வீட்டை விட்டு விரட்டினார்.

இந்நிலையில் 2-வது குழந்தையை கணவரிடம் ஒப்படைத்த இளம்பெண் 5 வயது மகளுடன் கள்ளக்காதலன் அலெக்சுடன் கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ள சதுப்பு என்ற இடத்தில் குடியேறினார். இளம்பெண் கூலிவேலைக்கு சென்று வந்தார். அலெக்ஸ் குடி மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகி கிடந்தார்.

இந்நிலையில் நேற்று வேலை முடிந்து இளம்பெண் வீட்டுக்கு வந்தார். அப்போது 5 வயது மகள் உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த தாய் மகளை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதையும், நகக்கீறல் மற்றும் பல்லால் கொடூரமாக பல இடங்களில் கடித்திருப்பதும் கண்டறிந்தனர். இது குறித்து அவரது தாயிடம் டாக்டர்கள் கூறினர். இதில் அவர் அதிர்ச்சியடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறிது நேரத்திலேயே சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து கும்பளா போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மது மற்றும் கஞ்சா போதையில் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

காமவெறியில் சிறுமியின் உடலை பல்லால் கடித்தும், நகத்தால் கீறியும் கொடுமைபடுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அலெக்சை கைது செய்தனர்.