யாழில் இளம் பெண் ஒருவர் கூச்சல் இட்டவாறு வெளியே ஓடிவந்ததால் பதற்றம்
தென்னிலங்கைக் கட்சி ஒன்றின் யாழ். மாவட்ட வேட்பாளர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என இளம் பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார்.
சாவகச்சேரியில் உள்ள குறிப்பிட்ட கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட இளம் பெண் கூச்சல் இட்டவாறு வெளியே ஓடிவந்துள்ளார். இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அவரைச் சூழ்ந்த மக்களும் அந்தப் பகுதியில் இருந்த இராணுவத்தினரும் சம்பவம் தொடர்பில் கேட்டபோது, அந்தக் கட்சியின் வேட்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என பெண் தெரிவித்திருக்கிறார்.
வேலைக்கு ஆட்கள் தேவை என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தனது தாயார் நேற்றே தன்னை அங்கு கொண்டுவந்து விட்டார் எனவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்