தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் - சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் - சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டப்படி நாளைய தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை என அவர் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பதற்றமான, வாக்களிப்பு நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது.

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும்; தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 6 மணி வரை பொது மக்கள் வாக்களிக்க முடியும்.

அதனை தொடர்ந்து 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளர்கள் மாத்திரம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்