இந்தியாவில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நேற்று பதிவாகியுள்ளனர்

இந்தியாவில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நேற்று பதிவாகியுள்ளனர்

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நேற்று பதிவாகியுள்ளனர்.

இந்திய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் நேற்றைய தினம் 81 ஆயிரத்து 466 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் அதிகமானோர் மஹராஷ்ட்ரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவாகியுள்ளனர்.

இதற்கிணங்க இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்தை கடந்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் மேலும் 469 கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது