
சாக்லேட் வாங்கி தருவதாக 10 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 64 வயது முதியவர்... பின்பு அம்பலமாகிய உண்மை
இந்தியாவில் 68 வயதான முதியவர் ஒருவர் வீட்டினருகே வசித்த 10 வயதான சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 68 வயது நபர் தனியாக வசித்து வந்துள்ளார்.
அவர் வசித்த பகுதியில் பல கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருப்பதையும், அவர்களுக்கு 10 வயதான மகள் இருப்பதையும் அவதானித்துள்ளார்.
குறித்த பெரியவர் தனது வீட்டில் இருக்கும் போது மோசமான படங்களை பார்த்து வந்துள்ள நிலையில், சிறுமியை சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி அந்த குடியிருப்புக்குள் வந்துள்ளார்.
வந்தவர் சிறுமியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளதோடு, இந்த விடயத்தினை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்பு தனியாக அழுது கொண்டிருந்த சிறுமியை அவரது மாமா அவதானித்து விசாரித்த போது சிறுமி தனக்கு நடந்த கொடுமையினைக் கூறியுள்ளார்.
சிறுமியின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டு அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு பெரியவரை கைது பொலிசார் கைது செய்துள்ளனர்.