
டெல்லியில் ஹோலி பண்டிகையன்று 40.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியது. குறிப்பாக நஜப்கார், நரேலா, பிதாம்புரா மற்றும் பூசா பகுதிகளில் அதிகபட்சமாக 41 முதல் 42 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.
டெல்லியில் குளிர்காலம் முடிந்து கோடைவெயில் எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளது. வழக்கமாக ஹோலி பண்டிகை முடிந்து ஒரு வாரத்துக்கு பிறகே வெயிலின் தாக்கம் தெரியத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை அன்றே வெயில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. அதாவது ஹோலி பண்டிகையன்று 40.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியது. குறிப்பாக நஜப்கார், நரேலா, பிதாம்புரா மற்றும் பூசா பகுதிகளில் அதிகபட்சமாக 41 முதல் 42 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இது கடந்த 76 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் பதிவான மிக அதிக வெப்பநிலை ஆகும். தொடக்கமே இப்படி இருந்தால் இனி போகப்போக 50 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கலாம் என மக்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் வானம் கூராப்பு காட்டியது. காற்று பலமாக வீசியது. ஆனாலும் அது அனலாக தெறித்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்