டெல்லியில் சுட்டெரித்த சூரியன்: 76 ஆண்டுகளுக்குப் அதிகமான வெப்பநிலை பதிவு

டெல்லியில் சுட்டெரித்த சூரியன்: 76 ஆண்டுகளுக்குப் அதிகமான வெப்பநிலை பதிவு

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சித்திரை மாதம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் பங்குனி மாதத்தின் 2-வது வாரத்தில் இருந்தே சூரியன் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. சாலையில் நடந்து சென்றால் அனல் காற்று வீசுகிறது.

 

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டியை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று அதிகபட்சமாக 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1945-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அதன்பின் தற்போதுதான் மார்ச் மாதம் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.