
உத்தரகாண்டில் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டத்தில் கிர்கியா நகரில் புதன் ராய் என்பவரின் வீடு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு உணவுக்குப் பின் குடும்பத்தினர் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. அதில் ஒட்டுமொத்த வீடும் தரைமட்டமானது. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டன.
அப்போது 2 குழந்தைகள், 2 பெண்கள் ஆகிய 4 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.