பதற்றத்திற்கு மத்தியில் லடாக்கில் பிரதமர் மோடி ஆய்வு

பதற்றத்திற்கு மத்தியில் லடாக்கில் பிரதமர் மோடி ஆய்வு

பதற்றத்திற்கு மத்தியில் லடாக்கில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை லே பகுதிக்கு சென்று, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து வீரர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, நிமு பகுதிக்குச் சென்றார். நிமு பகுதியானது, 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு, இராணுவம், விமானப்படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடியுடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இராணுவ தளபதி நரவானே ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, சீன வீரர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இராணுவ வீரர்களை பிரதமர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.