இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மருத்துவமனையில் அனுமதி

இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மருத்துவமனையில் அனுமதி

இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், புதுடெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மார்பு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 வயதான இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு, வழமையான மருத்துவ பரிசோதனையுடன் உடல் நிலை குறித்து அவதானிக்கப்படுவதாக மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது