பேருந்து- முச்சக்கர வண்டி மோதி விபத்து; 13 பேர் பலி

பேருந்து- முச்சக்கர வண்டி மோதி விபத்து; 13 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சமையல் பணிக்காக சென்ற 12 பெண்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்