ராஜஸ்தானில் புகார் அளித்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலீஸ் துணை கமிஷனர் கைது

ராஜஸ்தானில் புகார் அளித்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலீஸ் துணை கமிஷனர் கைது

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சிறப்பு விசாரணை பிரிவில் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்தவர் கைலாஷ் சந்த் போக்ரா.

 


அண்மையில் இவரிடம் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு உள்பட 3 புகார்களை அளித்தார். இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கைலாஷ் சந்த் போக்ரா அந்த பெண்ணிடம் லஞ்சமாக குறிப்பிட்ட தொகையை கேட்டார். ஆனால் அந்தப் பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து, அவரை தனது ஆசைக்கு இணங்கும்படி கைலாஷ் சந்த் போக்ரா கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த புகாரின் பேரில் கைலாஷ் சந்த் போக்ராவை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக கைது செய்தனர்.‌ இதனிடையே ராஜஸ்தான் அரசு நேற்று கைலாஷ் சந்த் போக்ராவுக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டது.