உலகளாவிய ரீதியில் பேஸ் புக் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

உலகளாவிய ரீதியில் பேஸ் புக் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப், இன்ஸ்டாகிரம், பேஸ்புக் மற்றும் மெசேன்ஜர் போன்ற சமூக வலைத்தளங்கள் செயலிழக்கப்பட்டுள்ளன.

பாவனையாளர்களுக்கு அதன் பயன்பாடுகளை அணுக  முடியாத நிலை தோன்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எந்தவொரு பேஸ்புக் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாமை குறித்து பல பாவனையாளர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் அனைத்து பேஸ்புக் சேவைகளும் நேற்று இரவு 11.30 மணியளவில் மீண்டும் வழமைக்குத் திரும்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன