பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு சவாலா?

தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.

தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர்களின் தலையாய கடமையாக கருதப்படுவது குழந்தை வளர்ப்பு முறை.

நாம் வளர்ந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பிற்கென்று தனிக்கவனம் செலுத்தப்படாதற்கு காரணம் நாம் கூட்டு குடும்ப அமைப்பில் வளர்ந்ததே. தாய் தந்தை தவிர நம்மை அரவணைக்க வீட்டில் மற்ற உறவினர்களும் இருந்ததால் அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தற்போது கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாறியிருக்கின்றன. அதிலும் தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்வதாலும் ஒற்றை பெற்றோர்களின் நிலை பெருகி வருவதாலும், குழந்தை நிலை கேள்விக் குறியாகியுள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால் குழந்தைகளை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய கட்டாயமும் அதிகரித்துள்ளது.

 


எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.

அதனால் பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக அவர்களிடம் பேசிவிடுவது சிறந்தது. மேலும் முந்தைய தலைமுறையில் இதை செய்யாதே என பெற்றோர் சொன்னால் அதை அப்படியே பின்பற்றி நடந்த குழந்தைகள் தான் அதிகம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு, காரணங்கள் தேவைப்படுகிறது.

எனவே இதை செய்யாதே எனக்கூறாமல் இதை செய்தால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்காரணத்தோடு கூறினால் அவர்கள் அதை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். தவறான குழந்தை வளர்ப்புமுறை ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் சொல்கிறார்.