துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது.
பின்னர் நடந்த பரிசோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இறுதிச்சடங்களில் பங்கேற்ற மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.