இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்த சீனா – செயற்கைக்கோள் படம் வெளியீடு

இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்த சீனா – செயற்கைக்கோள் படம் வெளியீடு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களில், இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீனாவின் 16 கூடாரங்கள், ஒரு பெரிய தங்குமிடம் அமைக்கப்பட்டிருப்பதையும் 14 வாகனங்களையும் காண முடிகிறதென கூறப்படுகிறது.

அண்மையில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் சீன இராணுவத்தினர் ஊடுருவியதையடுத்து,  நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 25ம் திகதி நிலவரப்படி, 1960ம் ஆண்டு முதல் சீனா உரிமைகோரி வரும் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து 423 மீட்டர் தூரம் வரையுள்ள இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.