இலங்கையை வந்தடைந்தார் இம்ரான் கான் (படங்கள்)

இலங்கையை வந்தடைந்தார் இம்ரான் கான் (படங்கள்)

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திலுள்ள எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இதன்போது அவருக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளதுடன் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

இதேவேளை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 No description available.
No description available.No description available.