ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு -புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்கள் video

ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு -புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்கள் video

வயல்வெளியில் சுற்றித் திரிந்த ஆடு ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை எந்தவிதமான இயந்திரங்களும் இல்லாமல் சில இளைஞர்கள் கூடி புத்திசாலித்தனமாக மீட்டுள்ளனர்.

அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அதில், அசாம் மாநிலம் காவல்துறை கூடுதல் பணிப்பாளர் ஜெனரல் ஹர்தி சிங் இந்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியர்கள் பாணியில் மீட்கப்பட்டுள்ளது! உறுதியான மனநிலை, கூட்டான வேலை மற்றும் தைரியம் என்று எழுதினார்.

அந்த வீடியோ பதிவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்க ஒரு இளைஞரை தலைகீழாகக் குழிக்குள் அனுப்புகின்றனர். உள்ளே செல்லும் இளைஞரின் காலை இருவர் பிடித்துக் கொள்கின்றனர்.

அவர் தொங்கியபடி உள்ளே சென்று ஆட்டை பிடித்ததும் சரசரவென்று இளைஞரை மேலே இழுக்கின்றனர். ஆடு அவருடன் வெளியே வந்து துள்ளிக் குத்து ஓடுகிறது.

இதுவரை இந்த வீடியோ 1.2 லட்சம் பார்வைகளை ஈர்த்துள்ளது. பலரும் இந்த இளைஞர்களின் செயல் புத்திசாலித்தனம், என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.