கொரோனாவால் இறந்த கணவர், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி: திக்கற்று இருக்கும் இரு மகள்கள்
கொரோனா வைரஸால் கணவர் பலியான நிலையில் அவரது மனைவி அந்த அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் தந்தை, தாய் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் மரணம் அடைந்த நிலையில் அவர்களுடைய இரண்டு மகள்கள் தற்போது திக்கற்று இருப்பதால் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் இந்தியன் ரயில்வேயில் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ராம பிரபாவதி தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். இந்த குடும்பம் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கடந்த 24 ஆம் தேதி பிரபாகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் சமீபத்தில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக பிரபாகரன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சடலம் சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிரபாகரன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மதுரை மருத்துவமனை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதனை அடுத்து பிரபாகரன் இரண்டு மகள்கள் மதுரைக்கு கொரோனா பரிசோதனை செய்ய தாயாரை அழைத்த போது அவர் தனக்கு மனம் வேதனையாக உள்ளதாகவும் நீங்கள் மட்டும் சென்று பவாருங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கணவர் இறந்த துயரில் சோகமாக இருந்த ராமபிரபாவதி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் பரிசோதனை முடித்துவிட்டு திரும்பி வந்த இரண்டு மகள்கள் தனது தாய் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு தந்தையை இழந்த அடுத்த நாளே தாயையும் இழந்து நிற்கும் அந்த இரண்டு மகள்கள் தற்போது திக்கற்ற நிலையில் இருப்பதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.