
இலங்கையில் மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வரும் தடை உத்தரவு
ஒற்றை பயன்பாடு மற்றும் குறுகிய கால பயன்பாட்டுக்குரிய பிளாஸ்டிக் மீது விதிக்கப்பட்ட தடை 2021 மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வரும்.
பிளாஸ்டிக் ஒழுங்குமுறை தொடர்பாக 2021 ஜனவரி 21 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி எண் 2211/51 மூலம் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு குறிப்பிட்ட செயல்முறை, வர்த்தகம் அல்லது தொழில் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் விவசாய பொருட்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் பொருட்கள் மீதான தடை மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும்.
1. நிகர அளவு 20 மில்லி / நிகர எடை 20 கிராம் சமமான அல்லது குறைவான பைக்கற்றுகள் (உணவு மற்றும் மருந்துகள் அடைப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிர)
2. காற்று பொம்மைகள் - (பலூன்கள், பந்துகள், நீச்சல் குளங்களில் மிதப்பது மற்றும் நீர் விளையாட்டு உபகரணங்கள் தவிர)
3. பிளாஸ்டிக் படி கொண்ட Cotton Buds (மருத்துவ மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் Cotton Buds தவிர) தடைசெய்யப்பட்டுள்ளன.