
கோட்டையில் 40,000 சுவிஸ் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
கோட்டை - குணசிங்கபுர- டயஸ் வீதியில் உள்ள ஒரு மாடி குடியிருப்புத் தொகுதியில் வீடொன்றில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுவிஸ் சிகரெட்டுகள் 40,000 ஐ காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்த சிகரெட் தொகையுடன் ஹப்புத்தளையை சேர்ந்த 23 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
இந்த நபர் கோட்டை- கைசர் தெருவில் உள்ள ஒரு அத்தியாவசிய உணவு பொருட்களை விற்கும் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றி வந்துள்ளார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது, வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்