
தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாட்டில் உருவான மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சில நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பரவத் தொடங்கி உள்ளது. அவ்வகையில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி இதுவரை 187 பேருக்கு இந்த வைரசின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரசும் இந்தியாவில் நுழைந்துள்ளது.
4 பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.