இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்
2025 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டி உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, நவம்பர் மாத இறுதியில் 6.0 பில்லியன் டொலர்களாக இருந்த கையிருப்பு, டிசம்பரில் 6,825 மில்லியன் டொலர்களாக உயர்ந்து சுமார் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன், உத்தியோகப்பூர்வ கையிருப்பின் பிரதான கூறான அந்நிய செலாவணி கையிருப்பும், நவம்பரில் இருந்த 5,944 மில்லியன் டொலர்களிலிருந்து டிசம்பரில் 6,734 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.