உத்தியோகப்பூர்வ கையிருப்பில் உச்சம் தொட்ட இலங்கை...!

உத்தியோகப்பூர்வ கையிருப்பில் உச்சம் தொட்ட இலங்கை...!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தரவுகளை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த கையிருப்பு 6,825 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது 2025 நவம்பர் மாத இறுதியில் பதிவான 6,034 மில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 13.1 வீத அதிகரிப்பாகும்.

உத்தியோகப்பூர்வ கையிருப்பில் உச்சம் தொட்ட இலங்கை...! | Sri Lanka S Official Reserves Increase

அத்தோடு, உத்தியோகபூர்வ கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பானது 2025 நவம்பர் மாதத்தில் காணப்பட்ட 5,944 மில்லியன் டொலர்களிலிருந்து கடந்த டிசம்பர் மாதத்தில் 6,734 மில்லியன் டொலர்கள் வரை 13.3 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.