கொரோனா தொற்றுக்கு புதிதாக 25 பேர் உயிரிழப்பு!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக புதிதாக இன்று (திங்கட்கிழமை) மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துமனையில் 5 பேர், கே. எம்.சியில் 4 பேர் தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்தை பொருத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 82 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.