பிரித்தானியாவில் இந்த 12 பகுதிகளில் பாதிப்பு உச்சம்…

பிரித்தானியாவில் இந்த 12 பகுதிகளில் பாதிப்பு உச்சம்…

பிரித்தானியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இந்த 12 பகுதிகளில் மட்டும் பாதிப்பு உச்சம் கண்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில், கடந்த 7 நாட்களில் பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, கடந்த ஒரு வாரம் முன்பு அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்புடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,360 என இருந்த நிலையில்,

 

தற்போது அந்த எண்ணிக்கை 14,818 என வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

மேலும் ஜனவரி 1ம் திகதி பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 69,000 என பதிவாகியிருந்த நிலையில், அது தற்போது 79% வரையில் குறைந்துள்ளது.

தற்போது பிரித்தானியாவில் 233 பேர்களில் ஒருவருகு மட்டுமே அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

கொரோனா பாதிப்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தாலும், தற்போது 12 பகுதிகளில் உச்சம் கண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மிட்லாண்ட்ஸில் உள்ள ரட்லேண்ட் இங்கிலாந்தில் மிக உயர்ந்த கொரோனா பாதிப்பு விகிதத்தைத் தொடர்கிறது,

பிப்ரவரி 7 முதல் ஏழு நாட்களில் 186 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன.

மேற்கு யார்க்ஷயரில் உள்ள கால்டர்டேல் 165.5 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 195.8 என பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

வட கிழக்கு மற்றும் மிடில்ஸ்பரோ ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 356.1-ல் இருந்து 382.3 என அதிகரித்துள்ளன.

மிட் டெவோன் பகுதியில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 119.1-ல் இருந்து 142.1 என உயர்ந்துள்ளது,

மேலும் கொரோனா பரவுவதை சமாளிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இப்பகுதிகளில் உள்ள சுகாதாரத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.