நள்ளிரவில் ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்; 250 பேர் பலி

நள்ளிரவில் ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்; 250 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டதாகவும், 500 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள் தெரிவிகின்றன.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள நாட்டின் கரடுமுரடான வடகிழக்கு மாகாணமான குனாரில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்; 250 பேர் பலி | Earthquake Shakes Afghanistan 250 Dead

இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மீட்ப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.