வீதியில் கிடந்த முககவசத்தால்-குடும்பத்தவர்களுக்கே தொற்றியது கொரோனா
வீதியில் அநாதரவாக கிடந்த முககவசத்தை பயன்படுத்தியதால் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கொரோனா தொற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22ல் கொரோனா உறுதியானது.
வேலூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர்.
வீதியில் அவர்களது 20 மகன் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பொலிசார் ரோந்து வந்துள்ளனர்.
அபராதம் விதிப்பர் என பொலிசாருக்கு பயந்த இளைஞன் அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார்.
வீட்டிற்கு சென்ற அவரால் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விபரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.