
ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட இராணுவத் தலைவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை - அமெரிக்க ஜனாதிபதி கையொப்பம்...!
மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட இராணுவத் தலைவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது, இராணுவத் தலைவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்புடைய வர்த்தக நடவக்கைககள் என்பனவற்றின்மீதும் அவதானம் செலுத்தப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் உள்ள அரச நிதியில் 1 பில்லியன் டொலர், இராணுவத்தால் அணுகப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) உள்ளிட்ட அதிகாரிகளை கடந்த முதலாம் திகதி அந்த நாட்டு இராணுவம் தடுத்து வைத்து ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், அவர்களை விடுவித்து, ஜனநாயகத்தை மீள ஏற்படுத்துமாறுகோரி, தலைநகர் நைபிடோவில் (Nay Pyi Taw) பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருகின்றமை குறிப்பிடத்தக்கது