சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு...!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு...!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது, கொரோனா வைரஸ் உலகப்பரவல் தொற்றுக்கு முன்னதாக இருந்த நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், வரலாற்றில் முதல் முறையாக மசகு எண்ணெயின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

எனினும், தற்போது ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை, 60 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது, 50 சதவீதமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.