மட்டக்களப்பில் இன்று இரவு மீட்கப்பட்ட ஆணின் சடலம்

மட்டக்களப்பில் இன்று இரவு மீட்கப்பட்ட ஆணின் சடலம்

மட்டக்களப்பில் இன்று இரவு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் இரவு 7.00 மணியளவில் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர்