மம்மியின் வாயில் தங்க நாக்கு - வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்

மம்மியின் வாயில் தங்க நாக்கு - வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்

எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினை கொண்ட மம்மியொன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது .

அந் நாட்டில் அலெக்சாண்ட்ரியா பகுதியிலுள்ள டபோசிரிஸ் மேக்னா என்ற கோயிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே குறித்த மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் பழம்பெரும் கோயில்களில் கடந்த 10 வருடங்களாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 16 புதையிடங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதையிடங்களில் பல மம்மிகள் புதைந்திருந்தன. மார்பில் அணிகலன்கள் மற்றும் தலையில் கொம்புகள் வைத்த கிரீடத்தினாலும், மம்மிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை சரியான முறையில் பதப்படுத்தப்படவில்லை.

அதில் ஒரு மம்மியின் வாயில் தங்க நாக்கு இருந்ததைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்தனர்.