வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...!

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...!

ஐரோப்பிய நாடான இத்தாலி(Italy) தனது 2025 வேலை விசா திட்டத்தின் கீழ் 1,65,000 வேலை விசாக்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்காக (caregivers) ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்தாலியின் Decreto Flussi திட்டத்தின் கீழ், வேலை விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன் இந்த விசா முறைமையை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, குறைந்த பிறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அதிகரித்துள்ள நிலையில், அதை சமாளிக்க, பல துறைகளுக்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதே இத்தாலி அரசின் நோக்கமாகும்.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...! | Italy Ready To Provide 165 Lakh Work Visasஅந்த வகையில், இத்தாலியில் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ள முக்கிய துறைகளாக மருத்துவம், கட்டிடக்கலை, விருந்தோம்பல் துறை, தகவல் தொழில்நுட்பம், பயிர் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில் போன்றன காணப்படுகின்றன.

அதன்படி, வேலை விசா வகைகள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு,

1. Non-seasonal work visa (Decreto Flussi – Skilled Work Visa)

ஒரு இத்தாலிய நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.

நுல்லா ஓஸ்டா (Nulla Osta) வேலை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

தங்குமிடம், மருத்துவ காப்பீடு, வேலை அனுபவம்/தகுதிகள் போன்ற ஆவணங்கள் தேவை.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...! | Italy Ready To Provide 165 Lakh Work Visas

2. சீசனல் வேலை விசா (Seasonal Work Visa)

விவசாயம், சுற்றுலா, மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை காலம் 9 மாதங்கள் வரை இருக்கும்.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...! | Italy Ready To Provide 165 Lakh Work Visas

3.பராமரிப்பு பணியாளர் விசா (Caregiver Visa)  

முதியோர் மற்றும் உடல் நலக்குறைவுள்ளோருக்கான பராமரிப்பு பணியில் அனுபவம் அல்லது சான்றிதழ் தேவை.

தங்குமிடம், வேலை வழங்குநரின் அனுமதி, மருத்துவக் காப்பீடு போன்றவை தேவை.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...! | Italy Ready To Provide 165 Lakh Work Visas

4. சுயதொழில் விசா (Self-Employment Visa – Lavoro Autonomo)

தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், மற்றும் சுயதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிதி நிலைத்தன்மை, தொழில்திட்டம் (Business Plan), வர்த்தகக் குழுவில் பதிவு போன்றவை தேவை.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...! | Italy Ready To Provide 165 Lakh Work Visas

5. EU Blue Card

உயர் நிபுணத்துவம் (Highly Skilled Workers) வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

இத்தாலியின் சராசரி ஊதியத்தை விட அதிக சம்பளம் உள்ள வேலை வாய்ப்பு தேவை.