கோட்டாபயவுக்கு யாழில் இருந்து பறந்தது விசேட கடிதம்

கோட்டாபயவுக்கு யாழில் இருந்து பறந்தது விசேட கடிதம்

யாழ். மாநகர சபை தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் எமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மாநரக சபை பிரதி முதல்வர் து.ஈசன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 16 ஆம் திகதி கடமையின் நிமித்தம் அவசரகால சூழ்நிலைக்கு பதிலளிக்க முயன்ற போது எமது தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி ஒரு தீயணைப்பு வீரர் பலியானதுடன் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது வருத்தப்பட வேண்டிய விடயம். இந்த கோர விபத்தில் எமது தீயணைப்பு வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அவசர சூழலில் தீயணைப்பு சேவையை வழங்குவதற்கு எங்களுக்கு மாற்று வசதி இல்லை என்பதால் யாழ். மாநகர சபைக்கு அவசரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை பெறுவதற்கு தங்களிடம் கோரியுள்ளேன் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.