மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய ராணாவை நாடு கடத்த வாய்ப்பு : அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய ராணாவை நாடு கடத்த வாய்ப்பு : அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தஹாவூர் ராணாவை நாடு கடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துறைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய டேவிட் ஹெட்லி,  ராணா ஆகியோரை பிணையில் விடுதலை செய்வது குறித்த வழக்கு விசாரணைகளில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வாதிட்ட வழக்குறைஞர்,  “டேவிட் ஹெட்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். எனவே அவரை நாடு கடத்த முடியாது. ஆனால் ராணா தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாததுடன், விசாரணைக்கும் முறையாக ஒத்துழைக்கவில்லை. ஆதலால் அவரை நாடு கடத்த வாய்ப்புள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத படைகளால் மும்பையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு, அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு நபரான தஹாவூர் ராணாவை நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் கோரிக்கைக்கு அமைய கடந்த 10 திகதி ராணா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.