இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு...!

இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு...!

இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த சட்டங்களால் இந்திய சந்தைகளில் வர்த்தகம் அதிகரிப்பதுடன், விவசாய துறையில் கூடுதல் தனியார் முதலீடுகளை ஈர்க்க முடியும் எனவும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைதியான போராட்டங்கள் என்பது வெற்றிகரமான ஜனநாயக நாடுகளில் காணப்படும் மரபாகும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அதில் உள்ள முரண்பாடுகள் குறித்த அரசாங்கம் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடி ஒரு தீர்வினை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறானதொரு, நிலைப்பாட்டையே இந்திய உயர் நீதிமன்றமும் வெளிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டத்தை மீளபெறக்கோரி விவசாயிகள் டெல்லியின் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதோடு, அந்த சட்டத்திற்கு இந்திய உயர் நீதிமன்றினால் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.