கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்..!

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்..!

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் சற்றுமுன்னர் நடைபெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் வீதியைக் கடக்க முயற்சித்த போது வேகமாக வந்த உந்துருளி ஒன்று அவர் மீது மோதியதால் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

45 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்