கொரோனா தடுப்பூசியினால் உருவாகும் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனைகள் ஆரம்பம்..!

கொரோனா தடுப்பூசியினால் உருவாகும் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனைகள் ஆரம்பம்..!

 கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் எதிர்ப்பு சக்தி உருவாகும் விதம் தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகம் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த ஆய்வின் கீழ் குறித்த தடுப்பூசி உரு திரிபடைந்த வைரஸிற்கு எதிராக செயற்படும் விதம் தொடர்பிலும் ஆய்வு செய்யப்படுவதாக அந்த நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் அறிக்கை ஒரு மாத்திற்குள் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  தடுப்பூசியை சாதாரண பொது மக்களுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசி தொகையினை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் எதிர்காலத்தில் மேலும் 5 மில்லியன்  தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்