நுவரெலியா விரைவில் சுற்றுலா வலயமாகும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நுவரெலியா விரைவில் சுற்றுலா வலயமாகும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நுவரெலியாவை விரைவில் சுற்றுலா வலயமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான புதிய சுற்றுலாத்தளமாக நுவரெலியா மாற்றமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானு-ஓயாவில் இருந்து நுவரெலியா வரையில் கேபிள் கார் திட்டத்திற்காக 52 மில்லியன் யூரோ ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், அந்த திட்டத்தை பீதுருதாலகாலை வரையில் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 318 சுற்றுலாத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.