
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டம்!
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சென்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்