
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் மாத்திரம் 362 பேருக்கு நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானதாக கொவிட் 19 தொற்றினை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 24 ஆயிரத்து 690 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம், நேற்றைய தினத்தில் 88 பேருக்கு தொற்றுறுதியானதை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 65 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் களுத்துறை மாவட்டத்தில் 66 பேரும், கண்டி மாவட்டத்தில் 81 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 33 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 45 பேரும், குருநாகலில் 39 பேரும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 28 பேரும் மாவட்ட ரீதியில் நேற்றைய தினம் அதிகளவான கொவிட் 19 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர் என கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.