வளவை கங்கையில் நீராடச் சென்ற 16 வயது மாணவி பலி...!

வளவை கங்கையில் நீராடச் சென்ற 16 வயது மாணவி பலி...!

வளவை கங்கையில் 15 பேருடன் நீராட சென்ற நிலையில், 16 வயதுடைய கல்தொட்ட பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்களை அழைத்து சென்ற ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் மற்றும் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியின்றி, குறித்த ஆசிரியை 15 மாணவர்களையும் வளவை கங்கைக்கு அழைத்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்தொட்ட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்