இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை! பலர் கைது

இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை! பலர் கைது

நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கைளின்போது சுமார் 40ஆயிரம் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் இரண்டாயிரம் சோதனை சாவடிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகளில் 14ஆயிரத்து 420 பொலிஸ்அதிகாரிகள் பங்கேற்றனர். சோதனைகளின்போது 43ஆயிரத்து 596 வாகனங்கள் சோதனையிடப்பட்டநிலையில் 80ஆயிரத்து 985 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது போதைவஸ்து, சுடுகலன்கள் மற்றும் போக்குவரத்து மீறல்தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 172பேர் ஹெரோய்ன் மற்றும் கஞ்சாப் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.

8942 உள்ளூர் மதுபானங்களும் மூன்று உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. 243பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 40பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாவர்.

195பேர் மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமைக்காகவும் 5514பேர் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறியமைக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.