சித்தன்கேணி கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து வயோதிபப் பெண்களை தாக்கி நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருடைய மோப்ப நாயின் உதவியுடனே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (26) அதிகாலை குறிற்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை மேப்ப நாயுடன் சென்ற தடவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன்போது கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட ஓட்டில் காணப்பட்ட மோப்பத்தை கொண்டு பொலிஸ் மோப்ப நாய் அங்கிருந்து கொள்ளையர்களை தேடி சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.