கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது!

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569  புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,690,279  ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,358,328 குணமடைந்துள்ளனர்.

அத்துடன் 1 இலட்சத்து 78  ஆயிரத்து 200 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் நேற்று ஒரேநாளில் 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 53 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.