
நெதர்லாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
நெதர்லாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள்; வலுப்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளதோடு வாகனங்கள் என்பவற்றிற்கு தீ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு அவற்றிலுள்ள பொருட்கள் சூரையாடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை 'குற்றவியல் வன்முறைகள்' என டச்சு பிரதமர் மார்க் ரூட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பவர்கள் வன்முறையாளர்களாகவே கணக்கிடப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தின் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றதுஇ
200க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினர் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதோடு சுகாதார தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.