
வீடொன்றின் பின்புறத்தில் இறந்து கிடந்த வெளிநாட்டவர்! தொடரும் விசாரணை
தெஹிவளை அல்விஸ் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விழுந்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் படி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சமையலறைக்குப் பின்னால் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீட்டிற்கு அருகில் உள்ள பதினொரு மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில், இந்த நாட்டில் தனியார் துறையில் பணிபுரியும் சீன மற்றும் மியான்மர் நாட்டினர் குழு ஒன்று தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, சம்பந்தப்பட்ட நபர் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் தெஹிவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.