அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாநில தலைநகரான இன்டியானபொலிஸில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதயில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது என்று நகர காவல்துறைத் தலைவர் ராண்டல் டெய்லர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.